தெரிவுக்குழு கூட்டத்தில் கடும் வாய்த்தர்க்கம்! பொன்சேகாவை கடுமையாக திட்டிய சுமந்திரன்

நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு கூட்டத்தில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுடன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற தெரிவுக்குழுவின் அமர்வின் போது இருவருக்கும் இடையில் பரஸ்பர வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போது சுமந்திரன் கடும் தொணியில் பொன்சேகாவை எச்சரித்ததாக குறிப்பிடப்படுகிறது.

தெரிவுக்குழு கூட்டத்தில் இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்க மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்னவிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது சரத் பொன்சேகாவுக்கும் சுமந்திரனுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, இராணுவ தளபதியிடம் கேள்வி எழுப்பும் போது சுமந்திரன் அங்கு தலையிட்டுள்ளார். இதன்போது சுமந்திரனிடம், பொன்சேகா கேள்வி ஒன்று வினவியுள்ளார்.

அதற்கு கடுமையான பதில் ஒன்றை வழங்கிய சுமந்திரன், பீல்ட் மார்ஷல் என்னிடம் கேள்வி கேட்க முடியாது என தெரிவித்ததாக குறித்த ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

You May also like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *