தொண்டமான் திரும்பியதும் வரப்போகும் அதிரடி அறிவிப்பு இதுதான்

மலையகத்தில் அண்மையில் உருவாக்கப்பட்ட புதிய அரசியல் கூட்டணிக்குப் பெயர் அடுத்த வாரமளவில் சூட்டப்படவுள்ளது.
இந்த மாத ஆரம்பத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிஸின் தலைவரான நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இந்தப் புதிய கூட்டணி உருவாக்கப்பட்டது.

இதில் ஜனநாயக போராளிகள் கட்சி, முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் காங்கிரஸி உள்ளிட்ட சில கட்சிகள் இணைந்துகொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

எனினும் கூட்டணி உருவாக்கப்பட்டு ஒருமாதகாலம் ஆகின்ற போதிலும் இதுவரை கூட்டணிக்குப் பெயர்வைக்கப்படவில்லை.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் இந்தியா சென்று அடுத்தவாரம் நாடு திரும்பவுள்ள நிலையில் பெரும்பாலும் அடுத்தவாரத்தில் புதிய கூட்டணிக்குப் பெயர் வைக்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் உப தலைவரும், நுவரெலியா மாவட்ட அமைப்பாளருமான கணபதி கணகராஜ் எமது செய்திப் பிரிவுக்குத் தெரிவித்தார்.

You May also like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *