மறுபடியும் புதிய கூட்டணி ஒன்று கொழும்பில் உதயம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு புதிய கூட்டணி ஒன்றை அமைப்பதற்காக ஒப்பந்தத்தில் ஜனநாயக்க மக்கள் காங்கிரஸின் தலைவர் பிரபா கணேசனும், நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவும் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளனர்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல்களை எதிர்கொள்வதற்காக ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரான முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசன் மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இதற்கான நிகழ்வு கொழும்பில் இன்று காலை இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசன், தேர்தலை இலக்காகக் கொண்டு இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை என்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கின்ற ஒருவருக்கே தங்களது அடுத்த தேர்தலில் ஆதரவை வழங்குவதாகவும் கூறினார்.

You May also like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *