இந்தோனேஷியா பூமியதிர்ச்சி: இலங்கைக்கு ஆபத்தா?

இந்தோனேஷியாவில் இன்று மாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த பூமி அதிர்ச்சியை அடுத்து அயல்நாடுகள் மிகவும் அச்சத்தில் உறைந்திருக்கின்றன.

சுமத்திரா தீவின் கடற்கரை பகுதியில் 7.4 ரிக்டர் அளவிலான மிகவும் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தோனேஷியாவின் சுமத்ராவின் தீவின் தென்மேற்கில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகாத நிலையில், நில அதிர்வினால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படுமா என இதுவரை தகவல் வெளியாகவில்லை.

எனினும் இது குறித்து இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தொடர்புகொண்டபோது, சுனாமி எச்சரிக்கை குறித்த எந்தவொது அறிவிப்பும் இதுவரை விடுக்கப்படவில்லை என்று பதிலளிக்கப்பட்டது.

 

பூமி அதிர்ச்சியின்போது உயிரைக்காப்பாற்ற ஓடிய மக்கள்

 

You May also like