இந்தியாவின் படுகொலையை நினைவுகூர்ந்த யாழ் மக்கள்

இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பின் கொடூரத்தை நினைவுகூர்ந்து யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை படுகொலையின் முப்பதாவது ஆண்டு நினைவேந்தல் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
வல்வெட்டித்துறை பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் வல்வெட்டித்துறை நகரில் இவ்நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றது.

இதன் போது பொதுச் சடர் ஏற்றப்பட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உட்பட வல்வெட்டித்துறைநகரசபை உறுப்பினர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த 1989ஆம் ஆண்டு இந்திய இராணவத்தினரினால் ஆடி அமாவாசை விரத தித்தன்றுமேற்கொள்ளப்பட்ட படுகொலையில் 72 பொதுமக்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அந்த படுகொலையின் முப்பதாவது ஆண்டு நினைவேந்தலே இன்றையதினம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May also like