மகனுக்காக ஆளுநர் பதவியை தூக்கியெறிந்த பெரேரா

ஊவா மாகாண ஆளுநர் பதவியிலிருந்து நேற்று முன்தினம் விலகிய மார்ஷல் பெரேரா, தனது காரணத்தை மிகத் தெளிவாக ஊடக சந்திப்பில் தெரிவித்திருக்கின்றார்.

தனது புதல்வரான நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, எதிர்வரும் 11ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணையவுள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் இப்பதவியில் தாம் இருப்பது முறையல்ல என்று ஊவா மாகாண முன்னாள் ஆளுநர் மார்ஷல் பெரேரா தெரிவித்தார்.

அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயத்தைக் கூறினார்.

You May also like