புர்கா ஆடைகள் தடை:நெதர்லாந்து அரசாங்கம் அதிரடி

நெதர்லாந்து நாட்டில் புர்கா, நிக்காவ் மற்றும் முகத்தை முழுமையாக மூடக்மூடிய ஆடைகளை அணிவதற்கு நேற்று முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பொது கட்டிடங்களில், போக்குவரத்துக்களில் இந்த ஆடைகளை அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்திருக்கின்றனர்.

சுமார் 17 மில்லியன் மக்கள் சனத்தொகைக் கொண்ட நெதர்லாந்தில் 200 தொடக்கம் 400 வரையான பெண்கள் நிக்காவ் மற்றும் புர்கா ஆடைகளை அணிகின்றனர்.

இந்த நிலையில் குறித்த ஆடைகளை அணிவதற்கு தடைவிதிப்பதற்கான யோசனை கடந்த வருடம் ஜுன் மாதத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டிருந்தது.

எனினும் தற்போதே அந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் அதற்கெதிராக அங்கு எதிர்ப்புக்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை பிரான்ஸ், பெல்ஜியம், டென்மார்க், ஒஸ்திரியா ஆகிய நாடுகளிலும் இந்த சட்டம் அமுலில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

You May also like