பிரதமர் ரணில் மீது அடுத்தவாரம் விசாரணை

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்துவரும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு விசாரணைக்காக அழைப்பு விடுத்துள்ளது.

இதற்கமைய அடுத்தவாரம் 06ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிரதமர் முன்னிலையாக வேண்டும் என்ற அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல சட்டம் ஒழுங்கு அமைச்சரான கடமைபுரிந்த சாகல ரத்நாயக்க மற்றும் ரஞ்ஜித் மத்தும பண்டார ஆகியோருக்கும் அன்றைய தினம் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தவிர, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவிடமும் அன்றைய தினத்தில் விசாரணை நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May also like