07 பிக்கு சிறார்களுக்கு எச்.ஐ.வி:ரஞ்ஜன் ராமநாயக்க வெளியிட்ட மற்றுமொரு தகவல்

பௌத்த சிறுவர் பிக்குகள் 07 பேர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு இலக்காகிய நிலையில் தற்போது எச்.ஐ.வி தொற்றுக்காக சிகிச்சைப் பெற்றுவருகின்ற பரபரப்பு தகவல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான ரஞ்ஜன் ராமநாயக்க இந்த தகவலை வெளியிட்டார்.

ஊடகங்களுக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை கருத்து வெளியிட்ட அவர், இந்த பௌத்த சிறுவர் பிக்குகளுக்காக தனது குரல் தொடர்ந்தும் ஏங்கியொலிக்கும் என்றும் கூறினார்.

அண்மைக்காலமாக பௌத்த பிக்குகள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுவரும் இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்கவின் பதவி நாளை அல்லது இந்த வாரத்திற்குள் பறிக்கப்படலாம் என்கிற நிலையிலேயே இந்த சர்ச்சைக்குரிய மற்றுமொரு கருத்து அவர் வெளியிட்டிருக்கின்றார்.

You May also like