சுதந்திரக் கட்சி எம்.பி. சாலிந்த திஸாநாயக்க காலமானார்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குருநாகலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சாலிந்த திஸாநாயக்க தனது 61ஆவது வயதில் காலமானார்.

கடந்த சில வாரங்களாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர் இன்று மாலை காலமாகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் சார்பில் குருணாகலை மாவட்டத்தில் போட்டியிட்ட இவர், 54 ஆயிரத்து 318 வாக்குகளைப் பெற்று ஆறாவது இடத்தை பிடித்தார்.

மஹிந்த ஆட்சியின்போது அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவியையும் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

You May also like