கட்டுவாப்பிட்டிய பதற்றத்தை தணிக்க கர்தினால் விஜயம்

நீர்கொழும்பு குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு அருகில் இன்று காலை ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை அங்கு விஜயம் செய்யவுள்ளார்.

கட்டுவாப்பிட்டிய தேவாலயத்திற்கு அருகில் காணப்பட்ட மாதா சிலைமீது நேற்று இரவு விஷமிகளால் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால் குறித்த மாதா சிலை சேதமாகியது. இதனையடுத்து இந்த தாக்குதலை நடத்திய சூத்திரதாரிகளைக் கைது செய்யும்படி அங்கு பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து நீர்கொழும்பு முழுவதிலும் உள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.

You May also like