ஹிஸ்புல்லா இன்று வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

தனக்கெதிரான அத்தனைக் குற்றச்சாட்டிலிருந்தும் விடுதலை பெற்றுவிட்டதாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை விஜயம் செய்த அவர், ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தனக்கு எதிராக சில இனவாதிகளால் முன்வைக்கப்பட்ட அத்தனை முறைப்பாடுகளும் போலியானவை என்பது குற்றப் புலனாய்வுப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் ஊர்ஜிதமாகியதாக ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

You May also like