ஊடகவியலாளருக்கு அமைச்சர் திகாம்பரம் கொலை அச்சுறுத்தல்

அமைச்சர் திகாம்பரத்தினால் தினக்குரல் பத்திரிகை ஊடகவியலாளர் பிரசன்னாவிற்கு சற்று முன் தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் க.பிரசன்னா இதனை எமது செய்திப்பிரிற்கு உறுதிப்படுத்தினார்.

மலைநாட்டு புதிய கிராமங்கள் சமூதாய அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் வீடமைப்பு திட்டம் குறித்தும் அதில் இடம்பெற்றுள்ள பல்வேறு குறைபாடுகள் தொடர்பிலும்ஞாயிறு தினக்குரல் வாரவெளியீட்டின் மலையகப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்டுரை ஒன்று பிரசுரமாகியிருந்தது.

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாக கொண்டு, இளம் ஊடகவியலாளர் க. பிரசன்னா இந்த கட்டுரையை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் பிரசன்னாவுக்கு சற்றுமுன் அழைப்பை மேற்கொண்ட அமைச்சர் திகாம்பரம், சம்பந்தப்பட்ட ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் செய்திருக்கின்றார்.

அதேபோன்று ஊடகவியலாளருக்கு அழைப்பை மேற்கொண்ட அமைச்சர் திகாவின் இணைப்புச் செயலாளர் நகுலேஸ்வரன், திகாவுக்கு மேலாக ஒரு படி சென்று மிக மோசமான முறையில் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.

இந்த நிலையில் இந்த மிரட்டல் தொலைபேசி அழைப்பு குறித்து பொலிஸ் நிலையத்தில் முறையிடவும் தீர்மானித்திருப்பதாக ஊடகவியலாளர் க.பிரசன்னா கூறினார்.

இந்த கொலை அச்சுறுத்தல் அமைச்சர் திகாம்பரத்தின் அமைச்சிலிருந்து அவரது அருகிலுள்ள தொலைபேசியிலிருந்து விடுக்கப்பட்டுள்ளமை குரல் பதிவிலிருந்து ஊர்ஜிதமாகின்றது.

தொலைபேசி அழைப்பு குரல் பதிவு –

You May also like