மஹியங்கனை திருச்சபை மீது தாக்குதல்:ஒருவர் காயம்

பதுளை – மஹியங்கனை பிரதேசத்தில் மெத்தடிஸ்த திருச்சபை மீது இனவாதிகள் சிலர் மேற்கொண்ட தாக்குதலுடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த தாக்குதலுக்கு இலக்காகிய ஒருவர் காயமடைந்து சிகிச்சை பெற்றபின் வீடு திரும்பியுள்ளார்

கடந்த 04ஆம் திகதி ஞாயிறுக்கிழமை குறித்த தேவாலயத்தில் ஞாயிறு ஆராதனை இட்மபெற்றபோது சபைக்குள் நுழைந்த இனந்தெரியா தரப்பினர் அங்கு கூச்சலில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் சபை போதகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக இலங்கை மெத்தடிஸ்த திருச்சபை ஆயர் ஆசிரி பி.பெரேரா தெரிவித்தார்.

இதுதொடர்பாக ஹசலக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த விடயம் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடம் வினவியபோது சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று பதிலளித்தார்.

எவ்வாறாயினும் இந்த தாக்குதலை பிக்குகள் சிலர் இணைந்தே நடத்தியிருப்பதாக அறியமுடிகின்றது.

You May also like