மைத்திரிக்கு 10 நாள் காலக்கெடு விதித்த மஹிந்த

மாகாண சபைகளுக்கான தேர்தலை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நடத்துவதாயின் இன்னும் 10 நாட்களிற்குள் அதுகுறித்த தீர்மானத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் கூறினார்.

தனது பதவிக்காலத்தை நீடித்துக்கொள்வதற்கு ஜனாதிபதி ஒருபோதும் முயற்சிக்கமாட்டார் என்பதில் தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

You May also like