நாடாளுமன்றத்திற்குள் வரவா? ஹிஸ்புல்லா கோரிக்கை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் வெற்றிடத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜகத் புஷ்பகுமார நியமிக்கப்படவுள்ளதாக நம்பகரமாக தெரியவருகிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திஸாநாயக்கவின் பதவி வெற்றிடத்தை நிரப்புவதற்காக ஏற்கனவே தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட சாந்த பண்டார இன்றைய தினம் பதவியிலிருந்து விலகியிருக்கின்றார்.

இவர் ஏற்கனவே கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரான ஹிஸ்புல்லாவின் தேசியப் பட்டியல் வெற்றிடத்திற்காக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் வெற்றிடத்திற்காக தற்போது பலருடைய பெயர்களும் முன்மொழிவு செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், இந்த வெற்றிடத்தை தங்களுக்குத் தருமாறு கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், பிரசன்ன சோலங்காராச்சி, ஜகத் புஷ்பகுமார ஆகியோர் கோரியிருக்கின்றனர்.

இதனிடையே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான மொணராகலையைச் சேர்ந்த ஜகத் புஷ்பகுமார நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

You May also like