ஈஸ்டர் தாக்குதல் குறித்து மஹிந்தவின் கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல் பற்றி விசாரணை செய்வதற்கு சுயாதீன ஆணைக்குழு ஒன்றை அமைக்கும்படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு விஜேராமய இல்லத்தில் இன்று காலை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உள்ளுராட்சிமன்றங்களில் உள்ள கத்தோலிக்க உறுப்பினர்களை எதிர்கட்சித் தலைவர் சந்தித்தார்.

இதன்போதே அவர் இந்த விடயத்தைக் கூறினார்.

சுயாதீன ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கவேண்டிய உறுப்பினர்கள், எதிர் மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் ஏகோபித்த இணக்கப்பாட்டிற்கு அமைய நியமிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

You May also like