விசர்நாய் கடியினால் 16 பேர் பலி?

இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதிக்குள் விசர்நாய் கடித்ததில் 16 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

2018ஆம் ஆண்டில் இவ்வாறு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆகும்.

உலகம் முழுவதிலும் இதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரம் என்ற அதிர்ச்சித் தகவலும் இன்று வெளியாகியது.

இலங்கையில் இருக்கின்ற நாய்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனாகும். அதில் கருத்தடை செய்யப்படும் நாங்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 50 ஆயிரம்.

இந்த நிலையில் விசர்நாய் கடிக்காக அரசாங்கம் செலவுசெய்கின்ற நிதியானது வருடத்திற்கு 600 மில்லியன் ரூபாவாகும்.

You May also like