காணாமல் போனோரது உறவுகள் பேரணியில்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று புதன்கிழமை வவுனியாவில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.

வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக சுழற்சிமுறை உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையிலேயே இந்தப் பேரணியை அவர்கள் இன்றுகாலை முன்னெடுத்தனர்.

காணாமல் போனோரது உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் 900 நாட்களை கடக்கிறது.

இந்நிலையில் தங்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வை அரசாங்கம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே அவர்கள் இந்தப் பேரணியை நடத்தியுள்ளனர்.

You May also like