சஜித்தை வேட்பாளராக அறிவிக்கிறார் ஹரீன்:பதுளையில் பிரமாண்ட கூட்டம்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கும்படி மக்களையே அறிவிக்கச் செய்யும் வகையிலான பிரம்மாண்ட கூட்டமொன்றை நடத்தவுள்ளார் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ.

சஜித் வருகிறார் என்கிற தலைப்பில் எதிர்வரும் 12 ஆம் திகதி பதுளையில் இந்தக் கூட்டத்தை நடத்த அவர் திட்டமிட்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

ஸ்ரீரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது மாநாடு எதிர்வரும் 11 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இந்தக் கூட்டத்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May also like