சேருநுவர பகுதியில் கைக்குண்டொன்று அதிகாலை மீட்பு

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கைக்குண்டொன்று இன்று (8) அதிகாலை மீட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சேருநுவர அரியமங்கேணி பகுதியிலே கரல் படிந்த நிலையில் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீதியோரத்தில் காண் ஒன்றிலிருந்து அப்பகுதி மக்கள் வழங்கிய தகவலுக்கமைய மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த இடத்துக்கு விரைந்த பொலிஸார் கைக்குண்டினை கைப்பற்றி பொலிஸ் நிலையத்திற்கு பாதுகாப்பாக எடுத்துச் சென்றுள்ளதாகவும்,விசேட பொலிஸார் மூலம் செயலிழக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் யுத்த காலப்பகுதியில் இக் கைக்குண்டு போட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

You May also like