தமிழ்ப் பிரதிநிதிக்கு இரவில் அழைப்பு விடுத்த அமைச்சர் ரவி

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ளுமாறு முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசனுக்கு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரான அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று வியாழக்கிழமை இரவு பிரபா கணேசனுடன் தொடர்புகொண்டு இந்த அழைப்பை விடுத்திருக்கின்றார்.

எனினும் இந்த அழைப்பு பற்றி சற்று சிந்திக்க வேண்டும் என்று முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசன் பதிலளித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

You May also like