தீவிரவாதி சஹ்ரானின் சொத்துக்கள் முடக்கம்:எவ்வளவு தெரியுமா?

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் கொடூரத் தாக்குதலை நடத்தியிருந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரானின் வலையமைப்புக்குள் இருந்த கோடிக்கணக்கான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய 100 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் 13 கோடி ரூபா பணமும் முடக்கப்பட்டுள்ளதாக இரகசிய பொலிஸார் இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் தெரியப்படுத்தியுள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஷாணி அபேசேகர நீதிமன்றத்தில் இன்று இதனை அறிவித்தார்.

இந்த 113 கோடி ரூபா மொத்த சொத்துக்களில் வாகனங்கள், வீடுகள், தொழிற்சாலை, தங்க ஆபரணங்கள் ஆகியன உள்ளடங்குகின்றன.

தீவிரவாத தாக்குதல்களுடன் தொடர்புடைய 60க்கும் மேற்பட்ட நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டிருப்பதாகவும், இவர்களில் பெண்களும் இருப்பதாகவும் நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.

You May also like