கூட்டமைப்பு சஜித்திற்கு ஆதரவா? இன்று வெளிவந்த முக்கிய அறிவிப்பு

எங்களுடைய மனதில் அமைச்சர் சஜித் பிரேமதாஸவே இருக்கின்றார் என்று கூறியுள்ளார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்.

மன்னார் தோட்டவெளி ஜோசவாஸ் நகர் மற்றும் ஜோசப் நகர் ஆகிய குடியேற்ற கிராமங்காளை கையளிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே செல்வம் எம்.பி மேற்கொண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்புக்கள் வரும் போது தமிழ் மக்கள் சரியான முடிவு எடுப்பார்கள் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

You May also like