அவசரமாக மத்தளவுக்கு மாற்றப்பட்ட இருவிமானங்கள்:காரணம் இதுதான்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க வந்த இரண்டு விமானங்கள் அவசரமாக அம்பாந்தோட்டை மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு மாற்றப்பட்டு தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை அதிகாலை 2.45 அளவில் இடம்பெற்றுள்ளது.

தோஹா கட்டாரிலிருந்து இலங்கைக்கு வந்த கிவ்.ஆர்.-662 ரக விமானமும், சவூதி அரேபியாவிலிருந்து வந்த எயார் அரேபியா ஜி-9503 ரக விமானமும் இவ்வாறு மத்தள விமான நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன.

கட்டுநாயக்க பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட மினி சூறாவளி மற்றும் சீரற்ற காலநிலையே இதற்கு காரணம் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You May also like