பிக்குகளின் அடாவடி:மகாநாயக்க தேரர்களிடம் முறையிடுகிறார் பேராயர்

மஹியங்கனை பிரதேசத்தில் இலங்கை மெத்தோடிஸ்த திருச்சபை ஊழியர் மீதான பிக்குமார்களின் தாக்குதலுக்கு எதிராக மகாநாயக்க தேரர்களிடம் முறையிடவுள்ளதாக மெத்தோடிஸ்த சபை பேராயர் வண. ஆசிரி பி. பெரேரா ஆண்டகை தெரிவித்துள்ளார்.

எமது செய்திப் பிரிவுக்கு கருத்து வெளியிட்ட அவர், கிறிஸ்தவர்கள் மீதான பௌத்த பிக்குமார்களின் இப்படியான தாக்குதல்கள் குறித்து முறையான விசாரணைகள் இடம்பெறுவதில்லை என்று விசனம் வெளியிட்டார்.

ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் அநுராதபுரம் பிரதேசத்திலுள்ள மெத்தோடிஸ்த சபை மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்திய போதிலும் இன்றுவரை அதற்கு பதில் கிடைக்கவில்லை என்று அவர் கவலை வெளியிட்டார்.

இதனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முறையிட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

You May also like