ராகுல் அவுட்:காங்கிரஸ் தலைவர் தெரிவு இன்று

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் தெரிவு இன்று சனிக்கிழமை இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெரும்பாலும் முகுல் வாஸ்னிக் தலைவராக தெரிவாகலாம் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி, கடந்த லோக்சபா தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று, பதவியை இராஜினாமா செய்தார்.

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், அவரின் இராஜினாமா கடிதம் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், இதுவரை ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில் புதிய தலைவரை, கட்சியின் செயற்குழுதான் தெரிவு செய்யும் என, ராகுல் கூறிய போதிலும், அதற்கான பணிகள், இதுவரை ஆரம்பிக்கப்படாமல் இருந்த நிலையிலேயே இன்றைய தினம் கட்சியின் தலைமையகத்தில் செயற்குழுக் கூட்டம் நடத்தப்பட்டு புதிய தலைவருக்கான வாக்களிப்புக்கள் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

You May also like