20 ரூபா கொடுத்து 80 ரூபா களவு: உண்மைக்கதை

அட்டன் – பொகவந்தலாவ பகுதி தொழிலாளர்களின் இந்த மாத வேதனத்தில் 83 ரூபா சந்தாபணம் அதிகரிக்கப்பட்டமை தொடர்பாக தொழிலாளர்கள் கடுமையான விமசனத்தை வெளியிட்டு வருகின்றனர்.

குறிப்பாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்களுக்கு அதிகரிக்கபட்டுள்ளதாக இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

பொகவந்தலாவ பகுதியில் உள்ள தோட்ட தொழிலாளர்களின் இந்த மாத வேதன பட்டியலில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தொழிற்சங்கத்திற்கு தொழிலாளர்களின் வேதனத்தில் இருந்து மேலதிக மாக 83 ரூபா அறவிடபட்டுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதுவரை காலமும் தோட்ட தொழிலாளர்களாகிய நாங்கள் எமது வேதனத்தில் இருந்து மாதம் ஒன்றுக்கு 150 ரூபாய் மாத்திரம் அறவிடபட்டு வந்தது ஆனால் இந்தமாதத்தில் இருந்து தொழிலாளர்களாகிய எமக்கு எவ்வித முன் அறிவிப்பும்யின்றி ஒரு தொழிலாளிக்கு 233 ரூபாய் சந்தா பணமாக அறவிடபட்டுள்ளதாக மக்கள் சுற்றிகாட்டியுள்ளனர்.

இதேவேளை மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளத்தினை பெற்று தருவதாக கூறியவர்கள் வெறுமனே 20 ரூபாவினை மாத்திரம் பெற்றுகொடுத்து விட்டு இன்று எங்களின் மாதாந்த வேதனத்தில் எவ்வித முன் அறிவித்தலும்யின்றி 83 ரூபாவினை அறவிட்டதை எம்மாள் ஏற்றுகொள்ளமுடியாது என இம்மக்கள் குறிப்பிடுகின்றனர்.

தொழிலாளர் தேசிய சங்கம் மலையக மக்கள் முண்ணனி ஆகிய தொழிற்சங்கங்களில் 150 ரூபாய் மாத்திரமே அறவிடபட்டுள்ளது.

ஆனால் இலங்கை தொழிலாளர் காங்ரசின் ஆதரவாளர்களுடைய வேதனத்தில் மாத்திரமே 233ருபாய் அறவிடபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது. இந்தவிடயம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் தலையிட்டு அதிகரிக்கபட்ட இந்த சந்தா பணத்தினை குறைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய சம்பளச் சீட்டில் அதிகரிக்கப்பட்ட சந்தா

You May also like