தமிழரின் வாக்குகள் வேண்டாம் எனக்கூறவே இல்லை:கோட்டா விளக்கம்

தமிழ் மக்களின் வாக்குகள் தனக்கு அவசியமில்லை என்று தான் ஒருபோதும் கூறவில்லை என ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்திருப்பவரும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், அண்மையில் கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

நீண்டநேரக் கலந்துரையாடலில் தமிழ் மக்களின் வாக்குகள் இன்றி தனக்கு ஆட்சிக்கு வரமுடியும் என்பதை கோட்டாபய ராஜபக்ச கூறியதாக சித்தார்த்தனை மேற்கோள்காட்டி பல்வேறு ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்த விவகாரம் குறித்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, இன்று வெள்ளிக்கிழமை ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நாட்டிலுள்ள தமிழ்,சிங்கள மக்களின் அனைத்து வாக்குகளும் தனக்குத் தேவைப்படுகிறது என்றும், பொய்யான செய்திகளை பரப்புகின்ற ஊடகங்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என்றும் அறிவித்திருக்கின்றார்.

You May also like