மஹிந்த வெளியிட்டது உண்மையிலேயே அதிர்ச்சித் தகவலா?

தனது தாய்வீடான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் இருந்து தற்போது தாம் பிரித்திருப்பதற்கான காரணத்தை எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் சுதந்திரக் கட்சி பிண்ணிப் பிணைந்திருந்ததால் அக்கட்சியுடன் சற்றுத் தூரமாகவே தாம் இருந்ததாக குறிப்பிட்டார்.

இருப்பினும் தற்போது சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் விலகியிருப்பதால் அவர்களுடன் இணைந்து செயலாற்றுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் மஹிந்த ராஜபக்ச கூறினார்.

கொழும்பு விஜேராமயவில் உள்ள தனது இல்லத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

You May also like