அடுத்த ஜனாதிபதி யார்; மங்கள ஆரூடம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில், பல வழக்குகளை எதிர்கொள்ளும் கோட்டாபய ராஜபக்சவை களமிறக்கியிருப்பது அவர்களின் தோல்வியை உறுதpப்படுத்தியு;ளளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கடந்த கால சம்பவங்களைப் படிப்பினையாக எடுத்துக் கொள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தவறியுள்ளதாகவும், மங்கள சமரவீர, தனது பேஸ்புக் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய மாநாடு நேற்றைய தினம் சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

இதன்போது அந்தக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராகஇ பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அறிவிக்கப்பட்டார்.

இதுத் தொடர்பில் தனது பேஸ்புக் பத்தில் கருத்து வெளியிட்டுள்ள நிதியமைச்சர் மங்கள சமரவீர, “வழக்குகளை எதிர்கொண்டுள்ள தனதுசகோதரரான கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கியிருப்பது அவர்களின், தோல்வியை உறுதிப்படுத்தியுள்ளது. எனினும் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் களமிறக்கும் வேட்பாளரே அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

You May also like