அமெரிக்காவுடன் ஒப்பந்தம் சாகல விளக்கம்

அமெரிக்காவுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்வது யார் என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ள, அமைச்சர் சாகல ரத்நாயக்க, பொதுஜன பெரமுன கட்சியின் சம்மேளத்திற்கு முன்னதாக அமெரிக்க இராஜதந்திரியை சந்தித்தது யார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்தக் கட்சியின் முக்கிய தலைவர்கள், சம்மேளனத்திற்கு முன்னதாக, தெற்குஇ மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்கச் செயலாளர் அலிஸ் வெல்ஸை, மொட்டு கட்சியின் தலைவர்கள் சந்தித்துள்ளனர் என, அவர் குறிப்பிட்டுள்ளார்.

தெனியாய பிரதேசத்தில் நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

“டீல்களைப் பற்றி அவர்கள் ஒவ்வொருநாளும் கதைத்தாலும் அந்நபர்கள் தான் இந்த டீல்களை மேற்கொண்டுள்ளார்கள். தற்பொழுது மொட்டின் வேட்பாளரை அறிவிக்க முன்னரும் அவர்கள் தான் சந்திப்புக்களை மேற்கொள்கின்றார்கள். நாம் இராஜதந்திர கலந்துரையாடல்களை முன்னெடுத்தோம். யார் டீல்களை மேற்கொள்கின்றார்களென, மக்கள் தான் இறுதி முடிவினை எடுக்க வேண்டும். ” என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

You May also like