தனஞ்ஜயவின் சுழலில் சுருண்டது நியுசிலாந்து

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் மழைக்குறுக்கிட்ட நிலையில், நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 203 ஓட்டங்களை பெற்றுள்ளது.

தேநீர் இடைவேளையின் பின்னர் போட்டியில் மழைக்குறுக்கிட்ட நிலையில், ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. எனினும், தொடர்ச்சியாக கடுமையான மழை பெய்யத் தொடங்கியதில், முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.

சுழல் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளம் என்பதால் அஜாஸ் பட்டேல், வில் சமர்வில் மற்றும் மிச்சல் சென்ட்னர் ஆகியோரை நியூசிலாந்து அணி களமிறக்கியது.

இலங்கை அணி பகுதி நேர சுழல் பந்துவீச்சாளர் தனஞ்ஜய டி சில்வாவுடன், முதன்மை சுழல் பந்துவீச்சாளர்களான அகில தனஞ்ஜய மற்றும் லசித் எம்புல்தெனிய ஆகியோரை களமிறக்கியது.

இந்த மாற்றங்களுடன் இரண்டு அணிகளும் களமிறங்க முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி அகில தனஞ்ஜயவின் சுழலில் சுருண்டது.

மதியபோசன இடைவேளையின் போது 71 ஓட்டங்களுக்கு முதல் 3 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது நியுசிலாந்து அணி, தேநீர் இடைவேளையின் போது 179 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.

இதன் மூலம் அகில தனஞ்ஜய டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 4ஆவது 5 விக்கெட் பிரதியை பதிவு செய்தார்.

ஆட்டநேர முடிவில் ரொஸ் டெய்லர் ஆட்டமிழக்காமல் 86 ஓட்டங்களை பெற்றிருந்ததுடன்இ இலங்கை அணி சார்பாக அகில தனஞ்ஜய 57 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

You May also like