ஐ.தே.கவில் பல வேட்பாளர்கள்; சஜித்தை தெரிவு செய்வதில் தவறில்லை

ஜனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டு மக்களின் கருத்துக்களை செவிமடுக்கும் கட்சி என்ற அடிப்படையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவெனின், அவரை பெயரிடுவதில் பிரச்சினையில்லையென அந்தக் கட்சின் தவிசாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் கட்சிக்குள் பலரும் வாய்ப்பினை கோருவதால், அதுத் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி, ஜனநாயக ரீதியான ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டிய கடப்பாடு ஐக்கிய தேசியக் கட்சிக்கு காணப்படுவதாகவும், கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவின் கனிய எண்ணெய் மற்றும் இயற்கை வாயு என்பன காணப்படும் நிலப்பரப்புக்களைக் கண்டறிந்து அவற்றை அகழ்ந்தெடுப்பதற்கான இருதரப்பு உடன்படிக்கையொன்று இன்று கைத்தாத்திடப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி, பெற்றோலியவள அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசீம் மற்றும் ஸ்கொட்லாந்தை தளமாக கொண்டு இயங்கும் பெல்ஜியோ என்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் பொதுமுகாமையாளர் ஜோன் மக்பேர்லேன் ஆகியோருக்கிடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள அமைச்சில் இடம்பெற்ற இந்த உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில் பங்கேற்றதன் பின்னர் ஊடங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“இந்த நாடு முன்னேற வேண்டும். இந்த நாடு மாற்றமடைய வேண்டும். அபிவிருத்தி அடைந்த நாடாக மாறவேண்டும். வெறுமனே பேசிக்கொண்டிருந்தது போதும். ஆகவே அவ்வாறான மனிதர் தொடர்பில் பொதுமக்கள் சிந்திக்கின்றனர். ஆகவே பொதுமக்களின் குரலுக்கு செவிசாய்த்து அந்த இடத்திற்குச் செல்வதற்கு நாம் தயார்.

“ஐக்கிய தேசியக் கட்சி ஒழுக்கத்தை மதிக்கும் கட்சியாகும். எமது தலைவர் ஜனநாயக ரீதியில் செயற்படும் ஒருவர். ஆகவே மிகச்சரியான பதிலை கட்சி தரும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May also like