இலங்கையில் இன்னும் தீவிரவாதிகள்?

இலங்கையில் தீவிரவாதிகள் இன்னும் நடமாடுவதாக பொதுபல சேனா தெரிவித்துள்ளது.

தீவிரவாதிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையிலேயே பொதுபல சேனாவின் பொதுச்செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர் இவ்வாறு கூறியுள்ளார்.

அட்டன் கினிகத்தேனை விகாரை ஒன்றுக்கு இன்று விஜயம் செய்திருந்த நிலையில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

குறிப்பாக 70 வரையிலான தீவிரவாதிகள் இவ்வாறு நடமாடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

You May also like