பொலிஸ் மா அதிபரை சந்திக்கிறார் பேராயர்

மஹியங்கனை மெதோடிஸ்த சபை மீதான தாக்குதல் குறித்து இன்றும் முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இலங்கை மெதோடிஸ்த திருச்சபை பேராயர் ஆசிரி பெரேரா இன்று வெள்ளிக்கிழமை பதில் பொலிஸ் மா அதிபரை சந்திக்கின்றார்.

மஹியங்கனை திருச்சபை மீது கடந்த 04ம் திகதி பிக்குகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் காயமடைந்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் மா அதிபரை சந்திக்கிறார் பேராயர

You May also like