சுதந்திர கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் ?

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பலப்படுத்துவதோடு, தொண்டரர்களின் ஆதரவையும்த தக்கவைத்துக்கொள்ள வேண்டுமாயின் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவது அவசியம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவிக்கும் பட்சத்தில் அவரையே வேட்பாளராக அறிவித்து தொடர்ந்து செயற்படுவதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் தான் தயார் எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் பிரதிநிதிகளின் சந்திப்பு ஒன்று அக்கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“கட்சி என்ற ரீதியில் ஒருவரை நிறுத்துவதற்கே எதிர்பார்க்கின்றோம். பல கட்சிகள் தமது வேட்பாளர்களை அறிவிக்க தயாராகிக்கொண்டிருக்கின்றார்கள். எனவே நாங்கள் மாத்திரம் வெறுமனே இருந்துவிட முடியாது.

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் களமிறங்குமாறு நாம் கோரியிருக்கின்றோம். அவருக்கு விருப்பமெனின் நாளை காலையே அந்தப் பணியை செய்வதற்குத் தயார்.

“எமது கட்சியின் தலைவர் ஒருவர் 45 நாட்களில் ஜனாதிபதியானார் அவ்வாறுதான் திட்டமிட்டு செயற்பட வேண்டும். அவசரம் தேவையில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை காப்பாற்ற வேண்டுமெனின் எமது கட்சியின் வேட்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும்.

“அவ்வாறான ஒரு நிலைமையிலேயே எமது ஆதரவாளர்கள் எம்முடன் இருப்பார்கள். அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May also like