ராஜிதவின் இல்லத்தில் ஐ.தே.க நேற்று முக்கிய தீர்மானம்

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் பெயர் குறிப்பானது மிகப்பெரிய அரசியல் கூட்டணி அமைத்து ஒப்பந்தத்திற்கு பிறகு தகுந்த நேரத்தில் சரியான முறையில் செய்வதற்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் பொது இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர்.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று  சனிக்கிழமை ஜனநாயக தேசிய முன்னணி அரசியல் கூட்டணியின் தலைவர்கள் கூட்டத்தின்போது இந்த பொது இணக்கப்பாடு எட்டப்பட்டது.

அதேவேளை இந்த அரசியல் கூட்டணி அமைக்கப்படுவதற்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளர் நியமிக்க இந்த கூட்டத்தின்போது தீர்மானம் எடுக்கப்பட்டதாக சில ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் பொய்யானது என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய அரசியல் கூட்டணிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் நியமனத்திற்கு எந்தவொரு தொடர்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவானது கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் மற்றும் நாடாளுமன்ற குழுக் கூட்டத்திலும் முடிவு செய்யப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை ஜனநாயக தேசிய முன்னணியின் பொதுச்செயலாளர் பதவி பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது

You May also like