இராணுவத்தளபதி நியமனம்; தமிழ்க் கூட்டமைப்பு கண்டனம்

இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமனம் செய்யப்பட்டமை தமிழர்களை அவமதிக்கும் செயலென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

“போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவரை இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை தமிழர்களை அவமதிப்பதாகும். இது எங்களுக்கு அதிர்ச்சியை தருகிறது. இது குறித்து நாங்கள் அதிருப்தியை வெளியிடுகின்றோம்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளதாக கூட்டமைப்பின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May also like