‘நேர்மையான ஊழலற்ற சிறந்த அமைச்சர் சஜித்’ மைத்திரி

பொதுமக்களின் அபிலாஷைகளை அறிந்த நேர்மையான ஊழலற்ற சிறந்த அமைச்சர் சஜித் பிரேமதாஸ என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் நிழல் உதா கம்மான செயற்றிட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மேலும் மூன்று கிராமங்கள் நே;றறைய தினம் பொலன்னறுவையில் திறந்து வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதhஸவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.

திம்புலாகலவில் நிர்மாணிக்கப்பட்டசொரிவில கொடராகலகம இ தளுகாணேயில் நிர்மாணிக்கப்பட்ட ஜீவஹத்தகம மற்றும் திசாலாகம ஆகிய கிராமங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டன.

66 வீடுகள் 691 இலட்ச ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன.

You May also like