ஷவேந்திர சில்வா நியமனத்திற்கு அமெரிக்காவும் எதிர்ப்பு

இலங்கையின் இராணுவ தளபதியாக லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பில் மிகுந்த கவலையடைவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இராணுவ தளபதியின் நியமனம் தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம், விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையினாலும் ஏனைய அமைப்புகளினாலும் ஆவணப்படுத்தப்பட்ட அவருக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள்இ பாரதூரமானதும் நம்பகரமானவையும் ஆகும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May also like