வார இறுதியில் பிரதமர் பதவியில் மாற்றம்?

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச இந்த வார இறுதியில் பிரதமராக நியமிக்கப்படுவார் என்று மாறுபடியும் தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளன.

பெரும்பாலும் இந்த வர இறுதியில் இந்த நியனமதை ஜனாதிபதி வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கி எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவை 2018ம் ஆண்டு ஓக்டோபர் 26ம் திகதி நியமித்து ஜனாதிபதி பாரிய சரிவை சந்தித்திருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் அதே தீர்மானத்தை ஜனாதிபதி எடுப்பாரா என்கிற சந்தேகமும் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

You May also like