ஈஸ்டர் தாக்குதல் குறித்து மைத்திரிக்கு வழங்கப்பட்ட முக்கிய கடிதம்!

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல் குறித்து உரிய விசாரணைகளை செய்வதற்காக சுயாதீன ஆணைக்குழு ஒன்றை அமைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலுள்ள கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 06 பேர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று வியாழக்கிழமை இந்தக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர்.

இதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர்களான நிமல் லன்சா, அருந்திக்க பெர்ணான்டோ, சனத் திஷாந்த, இந்திக்க அனுருத்த மற்றும் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே ஆகியோரே இந்தக் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளனர்.

மேலும் இந்தக் கடிதத்தின் பிரதி கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகைக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

You May also like