கோட்டாவுக்கு சஜித் ஆதரவா?ரணிலின் கழுகுப்பார்வை திரும்பியது

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவர் தலைமையிலான அரசியல் அணி மீது விமர்சனம் வெளியிடாமல் தவிர்த்து வரும் நிலைமை குறித்து ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களின் கவனம் திரும்பியுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச மற்றும் அந்த அரசியல் கூட்டணியின் மீது அரசியல் ரீதியாக தாக்கிப் பேசாமல் மாறாக ஐக்கிய தேசியக் கட்சி மீது அந்த தரப்பினருடைய விமர்சனங்களைப் கிளப்பிவிடுவதற்காக சஜித் பிரேமதாஸ செய்யும் சில விடயங்கள் குறித்தும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களிடையே கருத்து உருவாகியுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஊடகவியலாளர்களிடையே விசேட சந்திப்பொன்று அலரிமாளிகையில் புதன்கிழமை (21) இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது மேற்படி நிலைமை தொடர்பாக பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவந்த ஊடகவியலாளர்கள் அதுகுறித்து வினா தொடுத்தனர்.

எனினும் ஊடகவியலாளர்களால் முன்வைக்கப்பட்ட இந்த விவகாரத்தை நிராகரிப்போ அல்லது ஏற்றுக்கொள்ளாத பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, மருத்துவர் ராஜித சேனாரத்ன, அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட தலைவர்கள் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவர் தலைமையிலான அரசியல் கூட்டணி மீது அரசியல் ரீதியாக தாங்கள் தாக்கிப்பேசி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

உண்மையான எதிராளியை இனங்கண்டு அந்த பொதுவான எதிராளிக்கு எதிராக அனைத்து தரப்பினரையும் கூட்டிணைப்பதன் ஊடாகவே வெற்றியை அடைய முடியும் என்று சுட்டிக்காட்டிய பிரதமர், ஐக்கிய தேசியக் கட்சியின் ஐக்கியத்தையும், சமத்துவத்தையும் சீர்குலைப்பதற்கு எந்தவொரு சக்திக்கும் இடமளிக்கப்போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

You May also like