சிறை செல்லவும் தயார்: சஜித் அறிவிப்பு

விகாரைகளை அமைத்தது தான் செய்த குற்றம் என்றால் சிறை செல்லவும் தயார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

மாத்தறை – அக்குறஸ்ஸவில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

பௌத்த அறநெறிகள், விகாரைகள் புனரமைப்பு உட்பட பல்வேறு பௌத்த அபிவிருத்தி செயற்பாடுகளை செய்துவரும் தன்னை குற்றவாளிகள் பேலவும், அரச நிதியை வீண்விரயம் செய்வதாகவும் சிலர் சித்தரிப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் சஜித் பிரேமதாஸ, அது குற்றமென்றால் அதற்கான தண்டனையை அனுபவிக்கவும் தயார் எனவும் அவர் கூறினார்.

You May also like