ஜனாதிபதியை நாளை சந்திக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் சந்திக்கவுள்ளது.
இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

குறிப்பாக இனப்பிரச்சினைக்கான தீர்வு, வடக்கில் இராணுவ விவகாரம், புதிய அரசியலமைப்பு மற்றும் ஜனாதிபதி தேர்தல் ஆகியன விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கட்சியின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் உள்ளிட்ட சில கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொள்கின்றனர்.

அதேவேளை இந்த சந்திப்பில் கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் விவகாரம் பற்றியும் கவனம் செலுத்தப்படவுள்ளது.

You May also like