வாகனேரியில் விநாயகர் ஆலயம் மீது கழிவு தாக்குதல்

மட்டக்களப்பு – வாகனேரி பகிலாவலை ஸ்ரீ இத்தியடி சித்தி விநாயகர் ஆலயத்தின் மீது இனந்தெரியாத சிலர் மேற்கொண்ட அநாகரிகமான தாக்குதல் அப்பகுதி மக்களின் ஆத்திரத்தை தூண்டியுள்ளது.

கற்பூரம் எரிக்கும் சட்டியை உடைத்து ஆலயத்தின் உள் பதியில் சொப்பின் பையில் மலசலத்தை கட்டி வீசியுள்ள சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

இது குறித்த விசாரணைகளை வாழைசை;சேனை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

You May also like