தமிழ்க் கட்சிகளை இன்று சந்திக்க நேரம் கொடுத்த மைத்திரி

இரண்டு தமிழ்க் கட்சிகள் இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளன.

இதன்படி இன்று மாலை 05 மணிக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார்.

அதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் இன்று மாலை 06 மணிக்கு ஜனாதிபதியை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.

இந்த இரண்டு சந்திப்புக்களும் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளன.

You May also like