முஸ்லிம் உறுப்பினர்கள் இருவர் இன்று மீண்டும் பதவியேற்பு

கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் பதவிகளை இராஜினாமா செய்த முஸ்லிம் உறுப்பினர்களில் எஞ்சிய இரண்டு உறுப்பினர்கள் இன்று மீண்டும் பதவிகளைப் பொறுப்பேற்கவுள்ளனர்.

இதற்கமைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இரண்டு உறுப்பினர்களே இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசிம் சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சராகவும், அலிசாஹிர் மௌலானா சமூக சேவைகள் இராஜாங்க அமைச்சராகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்கவுள்ளனர்.

அரசாங்கத்தில் அங்கம் வகித்த 09 முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர் ஆகியோர் கடந்த மே 03ஆம் திகதி பதவிகளை தூக்கியெறிந்திருந்தனர்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைக்கு ஒத்துழைப்பு செய்யும் வகையிலேயே பதவிகளை இராஜினாமா செய்வதாகவும் அவர்கள் அறிவித்திருந்தனர்.

எனினும் பின்னர் அவர்களில் 07 பேர் அதே பதவிகளைப் பொறுப்பேற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

You May also like