மற்றுமொரு கூட்டணி உதயம்:30ஆம் திகதி வேட்பாளர் அறிவிப்பு

தொழிலதிபர் ரொஷான் பல்லேவத்த மற்றும் சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்கு ஆகியோர் தலைமையில் புதிய கூட்டணியொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

உருவாக்கப்பட்டுள்ள இந்தப் புதிய கூட்டணிக்கு அபிமன் லங்கா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதற்கான நிகழ்வு கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றது.

இந்தப் புதிய கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு எதிர்வரும் 30ஆம் திகதி கொழும்பில் வைத்து வெளியிடப்படவுள்ளது.

இதற்கான முன்ஏற்பாடாக நேற்றைய தினம் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றும் செய்துகொள்ளப்பட்டுள்ளது.

தற்சமயம் இவ்விரண்டு தரப்பினரும் வடக்கு,கிழக்கு பகுதிகளுக்கு இந்த வார இறுதிக்குள் பிரசாரங்களை செய்துமுடித்து, மலையகப் பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

You May also like